×

விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி

விராலிமலை, மே 3: விராலிமலை அருகே நேற்று இரவு நேரிட்ட சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். விராலிமலை அருகே உள்ள செவந்தியானிபட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராஜேந்திரன்(32). திருச்சியில் குடியிருந்து வரும் இவர் விராலிமலை அருகே உள்ள இஞ்சின் வாழ்வு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேர பணிக்கு தனது டூவீலரில் சென்றார். தொழிற்சாலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறிச்சிப்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த காரின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில்தூக்கி வீசப்பட்ட ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்த விராலிமலை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Viralimalai road ,Viralimalai ,Ramaswamy ,Rajendran ,Sewantianipatti ,Trichy ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்